Our Feeds


Wednesday, September 6, 2023

ShortNews Admin

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தேவை – ஹரின், மனுஷ கூட்டாக கோரிக்கை



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஏழு விசேட நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தில் இணைந்ததாகத் தெரிவித்த அமைச்சர்கள், அதில் ஆறு நிபந்தனைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.



"தேவனுடைய ஆலயத்தை இடிப்பவன் தேவனால் அழிக்கப்படுவான், ஏனென்றால் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது, நீயே அந்த ஆலயம்." நெருக்கடியை உருவாக்கி அதில் இருந்து அதிகாரம் பெற்ற எவராலும் அந்த அதிகாரத்தை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கை கூட நிரூபித்துள்ளது என செயின்ட் பால் கூறியதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »