நாட்டில் நேற்று பெய்த கடும் மழையை அடுத்து கரையோர ரயில் பாதையில் பேருவளை மற்றும் மக்கொனை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மாகல்கந்த பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதி சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
உடனடியாக தண்டவாளத்தில் விழுந்திருந்த மண் அகற்றப்பட்டு கரையோர ரயில் சேவைகள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன.