Our Feeds


Monday, September 11, 2023

ShortNews Admin

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்து பேரின் விபரங்களை பல நாடுகள் கேட்க்கின்றன - ஐ.நா பிரதி மனித உரிமை ஆணையாளர்



இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்து பேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என ஐக்கிய நாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.


இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் உரிய தகவல்கள் ஆதாரங்களை வழங்குவதற்காகவும் உரிய நீதித்துறை மற்றும் ஏனைய செயற்பாடுகளிற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் தனது அலுவலகம் ஆதாரங்கள் தகவல்களை சேகரிக்கும் பாதுகாக்கும் ஆராயும் நோக்கில் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என  குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டத்திடமிருந்து தகுதி வாய்ந்த அதிகாரிகள்  அதிகளவில் வேண்டுகோள்களை விடுக்கின்றனர்  குறிப்பாக பத்து பேர் குறித்த விபரங்களை கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »