Our Feeds


Saturday, September 16, 2023

ShortNews Admin

நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பரப்புவோருக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்.



சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், உறவு முடிந்த பிறகு, சமூக ஊடகங்கள் மூலம் மற்றவர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க தொடர்புடைய புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக இவ்வாறான குற்றத்திற்காக பிடிபடும் நபருக்கு ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அத்தகைய குற்றத்திற்காக இரண்டாவது முறையாக அல்லது மீண்டும் மீண்டும் பிடிபடும் நபர், அதற்குரிய தண்டனை அல்லது அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் இருக்கலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »