ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் குரில் தீவில் இன்று (02) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாகவும், 142 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.