ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று கட்சி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.