ஹோமாகம, நியந்தகல பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை விடுதிக்குள் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவரை ஹோமாகம பொலிஸார் இன்று (24) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் துபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘ஹண்டயா’ எனப்படும் பிரபல பாதாள உலக நபரின் மைத்துனரான ‘சுக்கா’ என அழைக்கப்படும் நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதானவர்களிடமிருந்து 42 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணம், தராசுகள், பொலித்தீன் பைகள், மெழுகுவர்த்திகள் மற்றும் போதைப்பொருளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.