பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று (29) காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ரயில் பாதையில் மரம் விழுந்துள்ளதாகவும், ரயில் ஊழியர்கள் மரத்தை அகற்றி சில மணித்தியாலங்களின் பின்னர் ரயில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.