எதிர்காலத்தில் அரசாங்கம், வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகி, ஒழுங்குபடுத்துவதை மட்டுமே மேற்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் முதன்மையாக தனியார் துறையைச் சார்ந்தே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
"எதிர்காலத்தில், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் முதன்மையாக தனியார் துறையைச் சார்ந்திருக்கும். அரசாங்கம் ஒரு ஒழுங்குமுறை ஆணையமாக மட்டுமே செயல்படும். அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை அதன் கடன் மறுசீரமைப்பை 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. IMF இன் முதல் மீளாய்வு நேற்று தொடங்கியது. இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்" என்றார்