Our Feeds


Friday, September 29, 2023

SHAHNI RAMEES

“இந்திய அழுகிய முட்டைகளை கொண்டு வந்து இந்நாட்டு மக்களுக்கு உணவளிக்கிறார்கள்” - அசேல சம்பத்

 

இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொமிசன் கொடுக்கல் வாங்கல் நடைபெறுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில்; ​​அரச வர்த்தக (பல்வேறு) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சிலர் இணைந்து இதனைச் செய்வதாகவும், அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாளாந்தம் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் பாவனைக்கு உதவாத முட்டைகள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »