Our Feeds


Saturday, September 30, 2023

Anonymous

முல்லைத்தீவு நீதிபதி ராஜினாமா விவகாரம் - ஜனாதிபதி ரனில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு.



குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்ற முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணித்துள்ளார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நீதவான் முறையிடவில்லை என்பதால் ஜனாதிபதி இவ்வாறு பணித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

அந்த விசாரணைகளின் போது, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிலோ, நீதவான் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யவில்லை என்று அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்த போது, நீதவானை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் ஆஜராகுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியதன் பிரகாரம், நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் சென்று அறிவுறுத்தியதாக சட்டமா அதிபர்
தெரிவித்துள்ளார்.

தனது அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக கூறி 23ம் திகதியிட்ட கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த நீதவான் ரி.சரவணராஜா, நாட்டிலிருந்து 24ம் திகதியன்று வெளியேறிவிட்டார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »