கொழும்பில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் அரசியல் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கையின் தோல்வி, நேற்று தமது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை அவர் இதன்போது எழுப்பியுள்ளார்.