Our Feeds


Tuesday, September 12, 2023

ShortNews Admin

A/L மாணவியை காணவில்லை - கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் கோரிக்கை



கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.


கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்பவர் கடந்த  05/08/2023 இல் இருந்து காணாமல் போயுள்ளார்.

பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும்  கிடைக்கவில்லை.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால்  உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மிக மனவருத்தத்துடன் தந்தை  கேட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »