Our Feeds


Saturday, September 2, 2023

ShortNews Admin

886 பேருக்கு 2 வருடமாக வழங்கப்படாதிருந்த நிரந்தர நியமனம் - வழங்கி சாதித்தார் செந்தில் தொண்டமான்.



கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படாதிருந்த நிரந்தர நியமனங்கள் 886 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது. 



ஆனால் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இரண்டு வருட காலமாக வழங்கப்படாமல் தற்காலிக நியமனத்திலே பணியாற்றி வந்தனர்.



ஆளுநர் செந்தில் தொண்டமான், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை மாகாண சபைக்குள் உள்வாங்கி அவர்களுக்கான நிரந்தர நியமனங்ளை வழங்கி வைத்தார்.



இந்நிகழ்வில் திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »