Our Feeds


Wednesday, September 20, 2023

Anonymous

பதுலையில் மாரடைப்பினால் மரணமடைந்த 770 பேர் - அதிர்ச்சித் தகவல்.



பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எஞ்சியோகிராம் இயந்திரம் இல்லாத காரணத்தினால் தான் இந்த துரதிஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் துணைச் செயலாளர் வைத்தியர். பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பதுளை மாவட்டம், ஊவா மாகாண போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் இந்த இயந்திரம் இல்லை. ஊவா மாகாணத்தில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்கள் இந்த இயந்திரத்தின் மூலம் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற வேண்டுமானால் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை, களுத்துறை நாகொட வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, அனுராதபுர வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும்.

குறித்த மருத்துவமனை தரவுகளின்படி கடந்த ஆண்டு மாத்திரம் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தந்த 2,179 பேரில் 750 பேர் எஞ்சியோகிராம் பரிசோதனைக்கு வருகை தந்தவர்களாவர். பதுளையில் மாத்திரம் கடந்த வருடம் மாகாண பொது வைத்தியசாலையில் 1887 பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 770 பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 

குறித்த மருத்துவமனையில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, கிட்டத்தட்ட 40 வீதமானோர் இதய நோய் காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »