Our Feeds


Sunday, September 17, 2023

Anonymous

6ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாசப்படம் காட்டிய ஆசிரியர் அதிரடி கைது!



ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்தார் எனக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சந்தேக நபர் சுமார் 15 மாணவிகளிடம் அவ்வப்போது இந்த ஆபாச காட்சிகளை காண்பித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக பெற்றோரிடமிருந்து   கிடைத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில்  ஆசிரியரை கைத்தொலைபேசியுடன் கைது செய்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »