மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொது மக்கள் பயணித்த படகு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் பயங்ரவாதிகளால் இராணுவ முகாம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 15 இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
அதேநேரம் மாலி பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலியில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக பிரகடனப்படுத்தி அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.