சமனல வாவியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சீரமைப்பது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மற்றும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் இணைந்து இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சமனல வாவியின் 6 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.