Our Feeds


Monday, September 25, 2023

ShortNews Admin

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறை தண்டனை.



பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 05 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.


இந்த தண்டனையை வழங்கும்போது பிரதிவாதிக்கு 20,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை நடத்திய கஹவத்தை பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதற்கு ஆயத்தமான வேளை, அவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்து.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »