இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரும் ஊக்குவிப்பாளருமான பெர்சி அபேசேகரவின் உடல் நலத்தை பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் அவருக்கு 5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
" இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது, மேலும் அவர் வீரர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் கோபுரமாக இருந்துள்ளார். அவரது நல்வாழ்வைக் கவனிப்பது எங்களின் பொறுப்பு, என்று மொஹான் டி சில்வா கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக பெர்சியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற மொஹான் டி சில்வாவினால் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.