ஈக்வடோரில் சிறைச்சாலை பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறைக்காவலர்களும் 7 பொலிஸாரும் கைதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடோரின் 6 சிறைகளில் மேற்படி அதிகாரிகள், கைதிகளால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜுவான் சபாத்தா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
மேற்படி 57 அதிகாரிகளும் கைதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் ஈக்வடோர் சிறைச்சாலை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்துள்ளனர்.
சிறையில் தமது பலத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரும்பாத கிரிமினல் குழுக்களின் ஏற்பாட்டில் அதிகாரிகள் கடத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் குய்டோவில் புதன்கிழமை நடைபெற்ற இரு குண்டுவெடிப்புகளுக்கும் இக்குழுக்கள் காரணம் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.