இருதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அரச வைத்தியசாலைகளில் 52 சதவீதமானோர் இருதய நோயால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் அதிகமானனோர் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் ஆகும்.
மேலும், இருதய நோயாளியை விரைவாகக் கண்டறியும் வழிமுறைகளை கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒலி மாசுபாடு இருதய நோய்க்கான முக்கிய காரணமாகும். ஒலி மாசுபாட்டைத் தடுக்க வேண்டும். இக் காலகட்டத்தில் மன அழுத்தங்களும் இருதய நோய்க்கு காரணமாக காணப்படுகின்றது. உடலில் வலி ஏற்படல் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு சோர்வு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.