ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அவருடன் பந்தயம் கட்டிய மற்றைய தரப்பு தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது ஒரு கட்சியின் பதவிக்கான அதிகூடிய பந்தயம் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தயாசிறி ஜயசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்வுகூறிய நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் ஓய்வறையில் வைத்து மக்களுக்கு இந்த பந்தயம் குறித்து அறிவித்துள்ளார்.
என்னை கட்சியில் இருந்து நீக்க முன்னர் (செப்டம்பர் 4) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே 50 இலட்சம் பந்தயம் கட்டப்பட்டதாக வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பந்தயத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் கூறிய கணிப்பு உண்மையாகியுள்ளதாகவும், அதன்படி 100 இலட்சம் அவரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.