ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் ரூபா பந்தயம் கட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜசேகர தெரிவித்துள்ளார்.
யூடியூப் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சாமர தசநாயக்கவிடம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை காட்டிக்கொடுத்து அரசாங்கத்திடம் இருந்து பதவிகளையும் வரங்களையும் பெற்றுக்கொண்ட ஒரு குழுவினர், சட்ட விரோதமாகவும் கட்சிக்குள் மீண்டும் பிரவேசித்து தம்மை கட்சியில் இருந்து நீக்க சதி செய்வதாகவும் ஜயசேகர மேலும் குறிப்பிடுகிறார்.