சனல் 4 தனது கருத்துக்களை திரிபுபடுத்தியுள்ளது என ஜேர்மனி சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சரத்கோன்ஹகாகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படத்திற்கு தான் தெரிவித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இலங்கையின் ஊடகவியாலாளரும் பிரிட்டிஸ் பிரஜையுமான பராஸ் சவுகெட்டாலி தன்னிடம் பேட்டி வழங்குமாறு கேட்டிருந்தார் என தெரிவித்துள்ள முன்னாள் தூதுவர் பிரிட்டனை தளமாக கொண்ட ஐடிஎன்னிற்கு பேட்டி வழங்குமாறு அவர் கோரியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தான் வழங்கிய பேட்டியின் சூழமைவு முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தாக்குதல் முற்று முழுதாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கை என தெரிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2015 - 2010 மகிந்த ராஜபக்ச எப்படி தேர்தலில் வெற்றிபெற்றார் என அவர்கள் என்னை கேட்டவேளை அவர் அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்பட்டார் என நான் தெரிவித்தேன்.
அவர்கள் இந்த இரண்டு பகுதிகளை மாத்திரம் பேட்டிக்கு பயன்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர் இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களில் இருந்து சில படங்களை சனல் 4 பயன்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இங்கு வந்து அந்த படம் பிடிக்கவில்லை உள்ளுர் ஊடகமொன்றே அதனை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையமாக கொண்டு இலங்கையின் அரசியல் நிலை குறித்து உரையாடும் விதத்தில் பிரிட்டனின் ஐ.டி.என் என்னை ஏமாற்றியுள்ளது டிசம்பர் 2022, 22 ம் திகதி மாதிவலவில் உள்ள எனது வீட்டில் வைத்து நான் தெரிவித்த விடயங்கள் சனல் 4இல் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் லண்டனை தளமாக கொண்ட ஐடிஎன் ஊடக நிறுவனமே அந்த பேட்டியை எடுத்துள்ளது என நான் நினைத்தேன் சனல் 4 அதனை ஒளிப்பரப்பும் வரை அவர்கள் தான் அந்த பேட்டியை எடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்