ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குழுவை நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே. சோஸா உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
கடந்த 05ஆம் திகதி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் தற்போதைய அரச உளவுத்துறையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோர் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.