நித்திரையில் இருந்த நான்கு வயது சிறுமி திங்கட்கிழமை ( 11) திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை திக்கேனபுர பகுதியில் வசித்து வரும் சசுகி அனன்யா செசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமி வழமை போன்று தனது தாயாருடன் அறையில் உறங்கச் சென்றுள்ளதாகவும் தாய் கண்விழித்த போது சிறுமி உறங்கிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர் சிறுமி சிறுநீர் கழித்ததைக் கண்ட தாய், சிறுமியின் உடைகளை மாற்றத் தயாரானபோது, சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை உணர்ந்த நிலையில் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியர்கள் சிறுமியை பரிசோதித்த போது சிறுமி இறந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர் .
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை (12) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.