அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.