பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கைக்கு பல விருதுகள் உரித்தாகியுள்ளன.
இவ்வாறு விருதுகளை பெற்ற இருவரில் கயல்விழி ஜெயபிரகாஷ் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
தீக்ஷனி காரியவசம், இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
கயல்விழி ஜெயபிரகாஷ் பெற்ற விருதுகள்
01.சிந்தனை அழகு கலை போட்டி – மூன்றாம் இடம்
02.ஸ்மோகி ஐ :- நான்காம் இடம்.
03.மணப் பெண் அலங்காரம் :- ஐந்தாம் இடம்
தீக்ஷனி காரியவசம் பெற்ற விருது
01.ஸ்மோகி ஐ :- முதலாம் இடம்
சுமார் 65திற்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் இந்த சர்வதேவ அழகு கலை போட்டியில் பங்குப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு பங்குப்பற்றியவர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குப்பற்றிய இருவரும் விருதுகளை பெற்றுக்கொண்டிருந்தனர்.
கயல்விழி ஜெயபிரகாஷ் 2016ம் ஆண்டு முதல் சர்வதேச அலகு கலை போட்டிகளில் பங்குப்பற்றி வருகின்றார்
இவ்வாறு பங்குப்பற்றிய போட்டிகளில் இதுவரை 6ற்கும் அதிகமான சர்வதேச விருதுகளை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.