வட்டரக்க விஜித தேரரினால் கடந்த 2014 ஏப்ரல் 9ம் திகதி கொழும்பு கொம்பணித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நஷ்டஈட்டுடன் முடிவுக்கு வந்தது.
கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த இன்றைய வழக்கில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
வட்டரக்க விஜித தேரர் அவர்களினால் குறித்த நாளில் மத நல்லிணக்க ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, கொம்பணித்தெரு நிப்போன் ஹோட்டலில் நடத்தப்பட்ட நிலையில் அதற்குள் பலவந்தமாக புகுந்த ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், கடும் அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கு ஞானசார தேரரிடமிருந்து 3 லட்சங்கள் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சுமார் 9 வருடங்கள் நடத்தப்பட்டு வந்த வழக்கு இன்று சமரசமாக முடித்துக் கொள்ளப்பட்டது.