கொழும்பு துறைமுக சுற்றுவட்டாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெளசர் ஒன்றிலிருந்து 3 ஆயிரத்து 300 லீற்றர் டீசல் திருடப்பட்டமை தொடர்பில் துறைமுக அதிகார சபையின் பொறியியலாளர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட டீசலின் பெறுமதி 10 இலட்சத்து 9 ஆயிரத்து 800 ரூபா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் துறைமுக அதிகார சபையின் பாதுகாப்பு அதிகாரியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் துறைமுக அதிகார சபையின் பொறியியலாளரொருவர், வாகன தரகர் மற்றும் சாரதிகள் இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் பெலிஹுல்ஓய, மினுவாங்கொடை மற்றும் ஹெய்யந்துடுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த மேலதிக விசாரணைகளை கடலோர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.