Our Feeds


Thursday, September 28, 2023

ShortNews Admin

குருந்திக்கு சொந்தமில்லாத காணியில் ஆலயம், விகாரைக்கு 3 ஏக்கரை ஒதுக்குக - புத்தசாசன அமைச்சின் செயலாளர்



குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத   காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்துள்ளார்.


பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, , இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்துள்ளார்.

  குருந்தி ரஜமஹா விகாரை பௌத்த தொல்பொருள் இடமாக தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.எனவே, இந்த நிலம் தொல்லியல் ரீதியாக ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் சொந்தமானது என்றார்.

இதேவேளை, வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை விடுத்துள்ளது.

குருந்தி ரஜமஹா விகாரை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் பல முன்மொழிவுகளை முன்வைத்தது.

மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையிலும் வும், ஊடக இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு  லலித் வர்ண குமார தலைமையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இங்கு கருத்துரைத்த தொல்லியல் பணிப்பாளர் நாயகம், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் குருண்டி ராஜமஹா ஆலயத்தைச் சுற்றியுள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு 229 ஏக்கர் காணி சொந்தமானது.

GPS தொழில்நுட்பத்தினூடாக அடையாளம் காணப்பட்ட நினைவுச் சின்னங்களின் அடிப்படையில் இந்தப் பிரதேசம் விஞ்ஞான காப்புப் பிரதேசமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குருந்தி ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள தொல்பொருள் காப்புப் பகுதியின் பரப்பளவை மேலும் உறுதிப்படுத்துவதற்காக நிபுணர் ஆய்வுக் குழுவொன்று ஆய்வுக்கு தயாராக இருப்பதாகவும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்களை இனங்கண்டு, தொல்பொருள் காப்புப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தவும், தொல்பொருள் பெறுமதி இல்லாத பகுதிகளை விடுவிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குருந்தி ரஜமஹா விகாரையை சூழவுள்ள பகுதி கதிர்காமம் பூஜா பூமியின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட வேண்டுமென குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குருந்தி ரஜமஹா விகாரையைச் சூழவுள்ள தொல்பொருள் காப்புப் பகுதியில் விவசாயம் செய்து வரும் மக்களுக்கு இழக்கப்படும் காணிகளை வேறு பிரதேசத்தில் இருந்து வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சுக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர், ஜயந்த கடகொட, எம்.ராமேஸ்வரன், சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பேராசிரியர் சன்ன ஜயசுமண, சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலை, குருந்தி என்றே அழைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »