Our Feeds


Wednesday, September 20, 2023

SHAHNI RAMEES

மன்னாரில் 3 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..!


 மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு

ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதைப்பொருளான கொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.


மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசணையில், உப பொலிஸ் பரிசோதகர் J.T.U ஜேவர்தன தலைமையிலான குழுவினரான குணசிங்க(75927), அசங்க(66638), பொலிஸ் கான்ஸ்டபிள்களான விமுர்த்தி (83790), திஸனாயக்க(90465), சுகிர்தரன்(25227), கருணா சிங்க(37662), அபயகோன்(35399), பிரேம ரெட்ன(37882) ஆகிய 9 பேர்


அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்தப்பட்டிருந்தார்.




கைதுசெய்யப்பட்ட நபர் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபர் என்பதுடன், சந்தேக நபரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளனர்.


மேற்படி கைப்பற்றப்பட்ட கொக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு 300 இலட்சத்துக்கும் (3 கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



மன்னார் நகர் நிருப


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »