யாழ்ப்பாணம், சுன்னாகம், தாவடி பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து பெற்றோல் குண்டுகளை வீசி ஐவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெற்றோல் குண்டுத் தாக்குதலால் வீட்டில் இருந்த தாய், தந்தை, மகன் மற்றும் இரண்டு மகள்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகமூடி அணிந்த நபர்களினால் இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகவும், வீட்டில் இருந்த 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்து பிரதான வாயிலின் ஊடாக வீட்டுக்குள் பிரவேசித்தவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.