வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது.
குறித்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2,100 ஆக உயர்ந்துள்ளன.
2 ஆயிரத்து 59 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி அரைக்கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.