300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்யப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகாளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து வரும் போதே 26 வயதான குறித்த கென்யப் பிரஜை சுமார் 4 கிலோ நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருளை எடுத்துவந்துள்ளார்.
கென்யப் பிரஜை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டாரின் தோஹாவுக்கு வந்து அங்கிருந்து கத்தார் ஏயார்வேஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதியில் 3 பிஸ்கட்கள் டின்களில் 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் வில்லைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட கென்யப் பிரஜை முதல் தடவையாக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.