Our Feeds


Sunday, September 17, 2023

ShortNews Admin

பிரித்தானியாவுக்கு 261 கோடி கட்டணத்தை செலுத்தத் தவறிய பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்



லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் உட்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள், தமது நாட்டிற்கு மில்லியன் கணக்கிலான நெரிசல் கட்டணங்களை இதுவரை செலுத்தவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது.


 வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக துணை செயலாளர் டேவிட் ரட்லி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.



 இதன்படி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மொத்த நிலுவையாக 6 இலட்சத்து 52 ஆயிரத்து 120 பவுண்ட்ஸ்களை (261 கோடி ரூபா ) செலுத்த வேண்டியுள்ளது.



 இந்தநிலையில் இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கையின் கீழ், இராஜதந்திரிகள், நாட்டின் சட்ட ஒழுங்குமுறைகளை மதிக்க வேண்டிய கடமை உள்ளது.



 எனவே, அனைத்து இராஜதந்திர பணிகளும் பிரித்தானிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது,



 இதில் நெரிசல் கட்டணத்தை செலுத்துவதும் அடங்கும் எனவும் லண்டன் நெரிசல் கட்டணத்தில் இருந்து தூதரகப் பணிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக துணை செயலாளர் டேவிட் ரட்லி தெரிவித்துள்ளார்.



 லண்டன் நெரிசல் கட்டணம் என்பது மத்திய லண்டனில் உள்ள நெரிசல் கட்டண வலயத்துக்குள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் இயக்கப்படும் பெரும்பாலான கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »