ரூபாய் 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பணத்தாள்கள் கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தரமான மற்றும் சுத்தமான பணத்தாள்கள் நாட்டில் புழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல் ரூ. 44.3 பில்லியன் பெறுமதியான 108.2 மில்லியன் சேதமடைந்த பணத்தாள்கள் 2021 இலும் அழிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.