பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் சென்ற பஸ் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.