நீர்மின் உற்பத்தி 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் சேனாவிரத்ன தெரிவித்துள்ளார்.மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் இவ்வாறு நீர் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் மழைவீழ்ச்சி கிடைக்குமளவின் அடிப்படையில் நாளாந்தம் நீர் மின் உற்பத்தி வீதம் மாற்றமடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருத்தபோதும் நீர் தேக்கங்களுக்கு இதுவரையில் போதியளவு நீர் கிடைக்கவில்லை என்றும் கடந்த வாரம் 14 சதவீதம் நீர் மின் உற்பத்தியை மிக அவதானத்துடனே மேற்கொண்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்கட்டியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி முறையாக கிடைக்காவிட்டால் மீண்டும் நீர் மின் உற்பத்தியை குறைக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.