கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதி அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் என்பன தடைப்பட்டிருப்பதால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெர்மா நகரில் மாத்திரம் இதுவரையில், ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர், காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.