இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்ததைத் தொடர்ந்து நேற்று வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டில் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியதுடன் அதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக பதிவு வெய்யப்பட்டிருந்தது.
இவ்வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 300, 000 ஐ தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.