தனது சட்டபூர்வமற்ற மனைவியின் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்தயா நாணயக்கார 18 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்ததுடன் அபராதமும் நஷ்டஈடும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
குறித்த அபராதத் தொகையைச் செலுத்தப்படாவிட்டால் மேலும் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் நட்டஈட்டை வழங்கா விட்டால் 12 மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.
45 வயதுடைய இந்திக நிலங்க வீரசிறி என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகியதெனிய பிரதேசத்தில் கடந்த 09.12.2006 அன்று அல்லது அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் காலி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.