மருந்து இறக்குமதியாளர்களுக்கு நிலுவைக் கட்டணமாக 13 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்து நிதி கோரப்பட்டுள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கட்டம் கட்டமாக நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் சில மருந்து இறக்குமதியாளர்கள், மருந்துகளை இறக்குமதி செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.