Our Feeds


Friday, September 29, 2023

Anonymous

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்கள் 12 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது - அஜித் ரோஹன கொலொன்னே



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான தகவல்களை வைத்துக்கொண்டு, பயங்கரவாதிகளை கைது செய்யாததால், அந்த தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும், நிலந்த ஜயவர்தனவே ஏற்க வேண்டுமென பல தரப்பினர் கருத்து வெளியிடுவதற்கு, அரச புலனாய்வு சேவை என்றால் என்னவென்ற புரிதல் அவர்களுக்கு இல்லாமையே காரணம் என கலாநிதி அஜித் ரோஹன கொலொன்னே குறிப்பிட்டுள்ளார்.


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான கலாநிதி அஜித் ரோஹன கொலொன்னே, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.



அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக ஆதாயம் பெறுவதற்காக பலமுறை இது குறித்து விவாதித்துள்ளனர். அவர்களின் தனிப்பட்ட இலாபங்களுக்காக இம்முறை, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மீது தாக்குலுக்கான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.



1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரச புலனாய்வு சேவை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சிவில் அமைப்பாகும்.



அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கான தகவல்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் முக்கிய பொறுப்பு என்றும், அரச புலனாய்வு சேவையில் எவருக்கும் பொலிஸ் அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஒரு பொலிஸ் அதிகாரி அரச புலனாய்வு சேவைக்கு நியமிக்கப்பட்டவுடன், அவர்கள் பொலிஸ் அதிகாரங்களை இழக்க நேரிடும் என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் தரப்பினருக்கு மட்டுமே அரச புலனாய்வு சேவை, தகவல்களை வழங்கும் எனவும் கலாநிதி அஜித் ரோஹன கொலொன்னே தெரிவித்துள்ளார்.



எனவே, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன தமது கடமையை நிறைவேற்றியுள்ளதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்னரே குறித்த தீர்மானம் எடுக்கும் தரப்பினருக்கு தாக்குதல் தொடர்பான தகவலை அவர் அறியப்படுத்தியுள்ளார் என்றார்.



இதேவேளை, அரச புலனாய்வு சேவையின் தற்போதைய தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிம் மற்றும் பிற பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் கலாநிதி அஜித் ரோஹன கொலொன்னே மறுத்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »