கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் செப்டெம்பர் 24 காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ள நிலையில், அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் உண்டாகும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.