தெஹிவளை பன்னலோக மாவத்தையில் 1 கிலோ 10 கிராம் 'ஐஸ்' (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 10 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள்
விற்பனை மூலம் பெறப்பட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.