10 ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இயந்திரங்களை கொண்டு வருவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று தர சோதனை செய்ய உள்ளது.
இயந்திரங்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாகவும் பழைய இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.