பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட நாணயமாற்று கடன் வசதி குறித்த மற்றுமொரு தவணை செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் நாணயமாற்று கடன் வசதி குறித்த இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நாணயமாற்று வசதியின் முதல் கடன் தவணையாக 50 மில்லியன் டொலர்களை செலுத்த கடந்த மாதம் இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Bangladesh Bankயின் நிர்வாக இயக்குனர் Mesbaul Haque, மீதமுள்ள 50 மில்லியன் டொலர் இந்த ஆண்டுகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.