இரண்டு கிட்னிகளும் அகற்றப்பட்ட நிலையில் உயிரிழந்த கொழும்பை சேர்ந்த சிறுவன் ஹம்தியின் இடது கிட்னியில் தானே பிரச்சினையிருந்தது சிறுவனின் வலது கிட்னி எங்கே என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வியெழுப்பினார்.
இதன் போது ஹம்தியின் மரணம் மற்றும் கிட்னி தொடர்பில் ரவூப் ஹக்கீமின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மரணித்த சிறுவன் ஹம்தியின் உடலில் இருந்து அகற்றப்பட்ட கிட்னி தற்போதும் குளிரூட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் இயக்குனர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்றில் அறிவித்தார்.